அம்மா அம்மா

கூடு விட்டு ஆவி பிரியப் போகும் நேரம்...
இதயம் இயங்க மறுக்கும் நேரம்...
என் உயிரை எடுத்துச் செல்ல
எமன் எட்டிப் பார்க்கும் நேரம்...

அப்பொழுது கூட,
என்
விழிகள் அவளைத் தான் காணத் துடிக்கும்
உதடுகள் அவள் பெயரைத் தான் சொல்லத் துடிக்கும் ...
கைகள் அவளைத் தழுவ ஏங்கும் ..
தலை அவள் மடியைத் தேடும்...


அம்மா !! அம்மா !! அம்மா !!
என்று...

எழுதியவர் : மு.க.சரவணன் (23-Nov-14, 3:32 pm)
சேர்த்தது : மு.க.சரவணன்
பார்வை : 250

மேலே