தொடரும் நட்பின் வலி -கயல்விழி

தொடரும் நட்பின் வலி -கயல்விழி

இன்று போல்
அன்றும் ஓர்
விடுமுறை நாளில்
அடைமழையில்
ஓர் குடைக்குள்

ஆயிரம் கதைகள் பேசி
அன்னநடை போட்டு
முழுவதும் நனைந்ததை
சற்றேனும் உணராமல்
வீட்டு முற்றம்வரை
வந்தததும் ..

மறுநாளே மூக்கடைத்து
மூச்சுவிட முடியாமல்
நான் திணற
எனக்காக நீ துடித்ததும்

தனிமையில் இன்று நான்
நனையும் போது ரணமாய்
ஓர் வலி எனக்குள் தோழி .

காதல் பிரிவின் வலி ஓர் நாள்
திருமணத்தில் மறைய
நம் நட்பின் பிரிவு மட்டும்
மறையாமல் /மறக்காமல்
வலிக்கின்றது /நினைக்கின்றது
அனுதினமும் ..!!!!!

எழுதியவர் : கயல்விழி (23-Nov-14, 3:47 pm)
பார்வை : 217

மேலே