உன் சுவாசம்
உன் சுவாசம்
நுகர்ந்திடும் பொழுதுகளில்
பொக்கிஷமாய் இனித்திடும் என்றென்றும்...
நினைவுகளின் ஆனந்தக் கூத்தில்
கவிதைகளாக மிளிர்ந்திடும்
என் சுவாசத்தின் நினைவுப் பெட்டகத்தில்....
நீ செல்லும் வழியில்
மவுனமாய் சிரிக்கிறது ரசிக்கிறது
ரோ (சா )க்களும் பன்னீர் பூக்களும்
உன் சுவாசம் கேட்டு ....
மருதாணி உன்னிடம்
வந்து வந்து செல்கிறதே
உன் விரல்களைக் கேட்டா..?
வாசமாய் வாசிக்கச் சொல்லி
உன் சுவாசத்திடம் யாசிக்கவா ....!