காதல்தோட்டம் வாழ்க
என்னை எனக்குள்ளே
ரகசியம் செய்தாய்
தள்ளிவிட்டுச் சென்றாய்
தனிமை கடலில்தானே
சொல்லிச் சொல்லிப் பார்த்தும்
நீயும் சொல்லிச் சென்றாய் ஏனோ?
நீயும் என்னைவிட்டு போனால்
இனி எங்கே நானும் வாழ
கண்ணீர் பூக்கள் பூக்கும்
என் காதல் தோட்டம் வாழ்க
உன் நாள் எந்நாள் மானே
அந்நாள் உனைச்சேர்வேனே
ஜன்னல் ஓரப்பயணம்
நீ தந்தாய் அதுபோல் சலனம்
உன்மனம் எனையும் அறிந்தால்
உடனே என்னிதயம் வரனும்