நானும் காதலாகிறேன்

..
பூத்தபின் பூக்கிறது
புதிதாய் சிந்தனைகள்
உள்ளிருந்தே கிள்ளி
உள்ளத்தில் துள்ளி
நானே அறியாமல்
நாணம் விரிகிறது
நாளும் கொஞ்ச
வருடும் என் மனம்
தொடுமா உன் நெஞ்சை
பாடும் இந்த ராகம்
படுமா உன் செவியில்
நீ மட்டும் - எந்தன்
மனம் புரியாமல்
மணம் உணராமல்
வானம் தொட்டு
இனம் பார்ப்பதென்ன
வண்ணம் தீட்டி
எண்ணம் கூட்டுவதென்ன
வாடுமுன் வந்து நீ கூடு
வீழுமுன் சிந்து நீ பாடு
எழுது உன் உறவு
தொழுகிறேன் உன் காதல்!