எழுதுகோலின் அற்புதங்கள்

எத்தனையோ எண்ணங்கள்
எடுத்தியம்பும் பல கைவண்ணங்கள்
அனுபுள்ளியில் உருவாகி
அற்புதமாகும் சிந்தைகள்...!

மனதின் ஓட்டம்
மணிக்கு ஆயிரம்
மையோட்டம் துளித்துளியாய்
மெய்யாகலாம் மெது மெதுவாய்
யாரறிவார்? யாவரும் அறியா அற்புதங்கள் !

சிந்தனையில் வந்து விழும்
கவி துளிகள் வருடும்
தென்றலாகி சிறு சாரலாகலாம்
சில நேரங்களில் ....
யாரறிவார்? யாவரும் அறியா அற்புதங்கள் !

வான் இடியும் மின்னலாக
பேய்மழையாய் பொழியலாம்
விந்தையாகி செயலாற்றி
பேரும் புகழும் வின்னைத்தொடலாம்...
யாரறிவார்? யாவரும் அறியா அற்புதங்கள் !

எழுதுகோலும் எந்தன் மனமும்
கூர்மையாகி செம்மை படுத்தி
செம்மொழியின் சிற்பியாகலாம்
சிந்தை ரணமாகி நொந்தும் போகலாம்...
யாரறிவார்? யாவரும் அறியா அற்புதங்கள் !

வெந்த சங்கு வென்மையாகலாம்
நொந்த மனமும் உண்மையாகலாம்
பந்த பாசமும் அந்து போகலாம்
பாரே உனை தூக்கி கொண்டாடலாம்...
யாரறிவார்? யாவரும் அறியா அற்புதங்கள் !

உந்தன் கவிதைகள் உன்னை உயர்த்தலாம்
உயர பறந்ததும் எழுத்தை மறக்கலாம்
உந்தன் வரிகள் சிலர் மனதை முறிக்கலாம்
ஊமை விழிகளுக்கும் உயிருட்டலாம்
யாரறிவார்? யாவரும் அறியா அற்புதங்கள் !

எழுதியவர் : கனகரத்தினம் (26-Nov-14, 8:51 am)
பார்வை : 59

மேலே