துயிலாத நினைவுகள்
அசையும் வாழ்க்கை நதியிலே
நங்கூரம் இட்ட நினைவுகள்
துயில் கொள்ள மறுக்கின்றன
அதில் கல்லூரி நினைவுகள்
கரும்பாய் சுவைக்கின்றன
முதல் நாள் பள்ளியிலே
முழித்த ஞாபகமும்
பள்ளிக்கு செல்லாமல்
ஒழித்த நினைவுகளும்
புளியடி பள்ளியில் செய்த
புளியங்காய் வேட்டையும்
ஆங்கிலம் தெரியாமல் அடிவாங்கி
தமிழன் என பெருமை பட்டதும்
தீப்பெட்டி கூட்டுக்குள்
சில் வண்டு அடைத்ததும்
திருவிழா கடைகளில்
பொம்மை துப்பாக்கி
திருடியதும்
நண்பனின் காதலுக்கு
கவிதை எழுதி கொடுத்ததும்
கூட்டத்தில் இடிபடவே
நல்லூர் திருவிழாவுக்கு
நண்பர்களோடு சென்றதும்
என தொடரும் நினைவுகள்
ஆளுக்கொரு திசை தேடி
நம் வாழ்க்கை நகர்ந்த பின்பு
நாளுக்கொரு நினைவுகள்
துயில் கொள்ள மறுக்கின்றன
கல்லூரி நினைவுகள்