காதலித்தேன்,கர்பமானேன்
![](https://eluthu.com/images/loading.gif)
காதலித்தேன்,கர்பமானேன்...
காதல் கட்டத்துக்குள் என்னை
கடத்தி சென்று...காம
விளையாட்டு விளையாடி விட்டு
கர்ப்பிணியாய் நிற்கிறேன் இன்று...
காரணம் நீ தான் என்றால்
கண்டு கொள்ளாமல் இருக்கிறாயே ..நீ
கட்டி கொள் என்னை...நீ
கலைக்க மாட்டேன் கற்பை நான்..
என் கண்ணிற் எல்லாம்
வெந்நீரை சிந்துகிறதே?
சுடவில்லையா..உன் இதயத்தில்
சுரணை கெட்டவனே..சூழ்ச்சி செய்தவனே..
காதலிக்கவில்லை என்னை நீ
என் கற்பை கறைபடுத்தி விட்டாய் நீ
காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறேன் உன்னை
காலம் ஒரு நாள் பதில் சொல்லும்..
அப்பா என்று அழைப்பான்
என் பிள்ளை உன்னை
அப்போது தெரியும்
நான் யார் என்று. காத்திருகிறேன்...