அப்பா
நான் பிறந்தேன்
அவர் அழுதார்-காரணம்
நான் பெண் என்று
எனக்குமுன் ஒரு அக்கா
எனக்கு பின் அரு தங்கை
பின் ஒரு தம்பி
அன்று துடங்கியவர்
இன்றுவரை ஓயவில்லை
உழைக்க
உழைத்தே கொடுத்தார்
ஊர்போற்ற படிக்க
உண்ண மறந்தார்
உறங்க மறந்தார்
உழைக்க மறக்கவில்லை
தன்னை மறந்தார்
தரயில் உழைத்தார்
தன்நிழல் மறையும் வரை
தனக்கென எதுவும் இல்லை
தன் பிள்ளைகள் பெற்றமுதல்
தாழ்ந்தே வாழ்ந்தார்
தன் பிள்ளைகள் தலை தளரும் வரை .
நன்றி அப்பா