திருநங்கை விடுகிறாள் சாபம் - சித்ரா

[ முன்குறிப்பு : 'வலி' என்ற ஒரு குறும்படம் கண்டேன். அதில் எழுந்த கொதிப்பே இந்தக் கவிதை..]

பால் இனத்தில் முரண்பாடு இருக்கலாம்
பாவி உன் இதயத்தில் ஏனோ?

சாதிமத வேற்றுமையில்
சத்தம் போட்டு
யுத்தம் செய்கிறாய்
--சலனப்படுத்தும் இந்த
வேற்றுமையில் சத்தமின்றி
ஒதுங்கிப் போகிறாய்..

ஒதுங்கிப் போவதிலும் பதுங்கிப் போவதிலும்
இல்லையடா ஒழுக்கம்..

--மனிதம் இங்கு வாழ வேண்டும்
மாற்றிவிடு உன் பழக்கம்..

வலியைத் தந்து வரம் கேட்கும் ஜென்மமே
--உன்னோடு கடவுளும் கொள்வான் வன்மமே

கங்கையோ, மங்கையோ, திருநங்கையோ
--அத்தனையிலும் உள்ளது பெண்மை..
--மதியிழந்து வெறுப்பது உன் சிறுமை..

எத்தனை பாவம் செய்தாயோ நீ
--பாவ விமொர்சனப் பாதையில் சேர்ந்துவிடு
இல்லையெனில் நரகத்தின் முகவரியில்
--உன் பெயரை முதலில் எழுதிவிடு

இயற்கையின் சீற்றத்திற்கு
--மனிதர்கள் பலியாகலாம்
இயற்கையின் மாற்றத்திற்கு
--பலியாகுதல் முறையோ
--பலியாக்குதல்தான் முறையோ..??

நெருங்க வேண்டாம் நீ
--உள்ளம் நொறுக்காமல் இரு.. போதும்..

எழுதியவர் : சித்ரா (26-Nov-14, 3:33 pm)
சேர்த்தது : சித்ரா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 151

மேலே