அந்த ஓர் நொடி

என்னவளே !!...

எனை கடந்து செல்கையில்
உந்தன் கூந்தல் வாசம் என் மூச்சில் கலக்கும்
அந்த ஓர் நொடி!! .....

கண்ணோடு கண் நோக்கி
வார்த்தைகள் இல்லா மொழி பேசும்
அந்த ஓர் நொடி!! ...

இதழ்கள் இரண்டும் இணைந்து
அன்பெனும் காதல் தேனை பருகும்
அந்த ஓர் நொடி !!...

உன் மாரோ என் தலையணையாய் மாற
நானோ உந்தன் குழந்தையாய் உறங்கிப்போன
அந்த ஓர் நொடி!!...


ஆம்
கானல் நீராய் மறைந்து போன
அந்த ஓர் நொடிக்காக!! ....

இன்று ஒவ்வொரு நொடியும்
தவித்து கொண்டிருக்கிறேன்
என்னவளின் வருகைக்காக !!....

எழுதியவர் : பிரதீப் நாயர் (26-Nov-14, 6:01 pm)
சேர்த்தது : பிரதீப் நாயர்
Tanglish : antha or nodi
பார்வை : 133

மேலே