சீதையின் மடல்

பள்ளி போக என் விருப்பம்
கஷ்டப்பாட்டில் என் வீடு
வேலை என்று அழைத்தார்கள்
வீட்டின் நிலைக்கண்டு...

பட்ட கடனை நான் அடைக்க
முன் பணமாய் ஒரு ரூபாய் பெற்று
பகுதி கடனை அடைத்து
தெற்கே சென்றேன் பரதேசமாய்
மீதி கடனை நான் அடைக்க...

வேலை என்று சென்றேன்
செங்கற்சூலையில்...

கொளுத்தும் வெயிலில்
காலணி இல்லாமல்
நானும் செங்கலும்....

கிழே விழுந்தது சூடு தாங்காமல்
செங்கற்கள்...
இரண்டானது...

செங்கலின் பரிதாப நிலைக்கண்ட முதலாளி
விலையாய் வாங்கினான் என் ரத்தத்தை...

இருப்பதினாங்கு மணிநேரத்தில்
எனக்கு இருப்பது நான்கு மணிநேர ஓய்வு..
ஒரு நாளில்..

உண்ணமுடியாத உணவும்,கந்தலான ஆடையும்
கிடைத்தது சம்பளமாக..

இருக்கும் காணி நிலம்கூட
இன்னொருத்தியுடன் பகிரிந்துள்ளேன்...

நீர் குடிக்க கிடைத்தால் அரிது
குளிக்க கிடைத்தால் அதனினும் அரிதென
ஔவையின் பாட்டகியது என் பிழைப்பு...

நோய்வாய்ப்பட்டால் மருந்தில்லை..
அதனால் இறந்தால் வியப்பில்லை...

எப்போது? வீடு செல்வோம் என்று என் எண்ணம்
இப்போது சென்றாலோ???
என் காலத்தை கழிக்க வேண்டும்
இந்நரகத்தில்...
என்னையும் சேர்த்து இங்கே ஆயிரம் சீதைகள்...

எங்களை மீட்க படையெடுப்பனோ?
இக்கலியுக ராமன்..

வெல்வானோ? படையெடுத்தாலும்..
என்றொரு ஐயம்!!!

நிச்சயம் ஒரு நாள் வெற்றி கொள்வான்
என்ற காத்திருப்பில்
ஒரு சீதை
முகவரி இல்லாமல் எழுதும் மடலிதுவே.....

எழுதியவர் : ஜெயக்குமார் கல்யாணசுந்தர (27-Nov-14, 2:56 pm)
பார்வை : 222

மேலே