நிலவும் இட்லியும்

காத்திருந்த
காகம்
நிலவைக் கடத்தி
சென்றது....
அழுத குழந்தையின்
தட்டில்
மாயாஜாலம்,
மீண்டும் நிலவை
மிதக்க விட்டது....

கவிஜி

எழுதியவர் : கவிஜி (27-Nov-14, 11:59 am)
பார்வை : 126

மேலே