எமது மண் எப்போது விடியும்

நாளை விடியும் நாளை விடியும்
என எதிர் பாத்திருந்தோம்
நாம் - ஆனால், என்றோ ஒருநாள் விடியும்
என்கின்ற நம்பிக்கையில் நாமும்
நடை போடுகின்றோம்

இருண்ட வானம் வெளுக்க
இருண்ட பூமி செழிக்க
இருண்ட மனம்கள் விழிக்க
இருண்ட எம் மண் செழிக்க
நாம் கரத்தில் துப்பாக்கி ஏந்தி
போராடினோம் போராடுகிறோம் போராடுவோம்

ஆணென்று பெண்ணென்று பாராமல்
அனைவரும் போராடினோம்
தளபதிகள் ஒன்றினைந்தோம்
தானை தலைவன் எம்மை வழி
நடத்தினார் - ஒற்றுமையாய் போராடினோம்

நம் தேகம் குண்டு பட்டு விழும் வரை
திறமை கொண்டு போராடினோம்
இன்னும் நான் சொல்வேன் எம்
போராட்டம் தொடர்கிறது என்று

கார்த்திகை பூக்கல் தெரு எங்கும்
பூக்க - மழைத்துளிகள் துயரத்தில் வானிலிருந்து
சிந்த - கல்லறைகள் உயிர் பெற்று முகம் மலர
தொடர்கின்றோம் நாம் எமது போராட்டத்தை.

எழுதியவர் : puranthara (27-Nov-14, 6:26 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 148

மேலே