இடை வெளி

சுகத்துக்கும்
சோகத்துக்கும்
இடையிலான
இடைவெளியைப்
போக்குவதோ?
காதல் வேதனையைக்
காட்டுவதோ அந்த
இடைவெளி?

மனதிலோடும்
மென்னுணர்வை
எளிமையாக
நேரடியாக
வீரியம் குன்றாமல்
சொல்லுவதோ
அதில் அடிக்கும் அலைகள்

அபூர்வமான
தனிமையில்
அந்த இடைவெளியில்
சிந்தித்துப் பார்த்தால்
எல்லாமே
வெளுத்தது எல்லாமே
பால்தான்.

இந்த இடைவெளியைப்
பற்றிக் கொண்டு ஏன்
இத்தனை நேரம்
இருக்கின்றேன்?

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (28-Nov-14, 4:10 pm)
Tanglish : idai veLi
பார்வை : 106

மேலே