உனக்குத் தெரியுமா,,,,,,ம்ம்ம்ம்

உனக்குத் தெரியுமா,,,,,,ம்ம்ம்ம்
===========================

கால்முறிந்த ரோஜா போல்
இன்று கட்டிலில்
கட்டுண்டு கிடக்கிறாய் நீ
இதுவரை அக்கொடிக்கம்பத்தில்தானே
இணைப்புக்கயிறால்
கட்டப்பட்டிருந்தது
"ஹேய் ம்ம்ம் இப்பக்கம் நெருங்காதே
அடிப்பின்னிடுவேன்" என்ற
உன் எண்ணங்களும்,,,என் கரங்களும்

ஹோ ஹோ அப்படியா என்றவள்
கொழு கொழு கண்களால்
அண்ணார்ந்து பார்த்துவிட்டு
ஆட்காட்டி விரலால்
மூன்றுமுறை கவிழ்த்தாடைத்தட்டியவள்
நீதானே அந்த கல்லுளி மங்கன்
எனச்சொல்லி களிப்பூட்ட முயல்வாய்

இதுவரை யாரோடும்
எப்படியேனும் இருந்திருப்பேன்
ஆனால்
உன்னோடு மட்டும்
இதுபோல் ஒன்றும் நேர்ந்துவிடக் கூடாதே
என்றுதானே ,,
இந்த போலீஸ் திருடன் விளையாட்டிலிருந்து
ஓடி ஒளியலானேன்

நீ பேச எத்தனிக்கும் எப்பொழுதும்
தவிர்க்கும் வண்ணமே
காரணங்களைத்தேடி தேடி
ஓய்ந்திருப்பேன்
நீயோ பகிரங்கமாக பிடிக்கவில்லையானாலும்
இராக்கம்பிளிக் கூடிட்டு
கண்டுமுட்டிய என் கள்ளத்தனங்களை
அதற்குள்ளே
இரசிக்கவேச்செய்கிறாய்

உனக்கென்ன
எனைக்காணாது போனாலும்
குறைசொல்ல ஒரு வாழ்க்கையும்
புலம்பித் தீர்க்க நான்கு சுவர்களும்
சுற்றியும் முற்றியும்
இருக்கத்தான் செய்கிறது

உனக்குத் தெரியுமா,,,,,,ம்ம்ம்ம்
சிறுக சிறுக உருவி எடுக்கும்
யாருடனான
என் அணையுடையா
நம்பிக்கையற்ற அனர்த்தங்களுக்குள் காணும்
இரசனை நிறைந்தொழுகும்
அச்சாயல்களையும்
போதம் களவாடும் நெடிகளையும் கடந்து
மீண்டும் வீசிப்போக மாட்டானா
இதுபோல் சில பேத்தல்களை
என்று யோசித்து நிற்கும்பொழுதே
உறுப்புகளால் குறுகி
துரும்பாகிப்போயிருப்பேன்
அகல அகல விரியும்
அவ்விழிகளுக்கு முன்னால்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (28-Nov-14, 3:49 pm)
பார்வை : 91

மேலே