உனக்குமட்டும் என்பதால்
உனது கன்னக் குழிக்குள் என்னை
விழ வைக்க அடிக்கடி சிரித்து
அடியோடு விழவைத்து விட்டாயே
விழ வைத்த நீ எனை எழ விடாமல்
உன் சிரிப்பை மறந்து விட்டாயே
நீ என்னை விட்டு பிரியும் தருணத்தில்
கண்ணீர் சிந்தி உன் மீது கொண்ட
அன்பை அனைவர்அறிய காட்ட
விரும்பவில்லை நான் நடக்கும்
நடையே காட்டிக்கொடுத்து
விடும் உன் பிரிவின்வேதனையை
உனக்குமட்டும் என்பதால்....