தாயன்பு கிடைக்காதம்மா

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம்
மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக்

கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே..

எழுதியவர் : (30-Nov-14, 4:54 am)
சேர்த்தது : sathish
பார்வை : 293

மேலே