பிறவி இனி வேண்டாம்

பிறவி இனி வேண்டாம்.

சிலையோ சித்திரமோ நீ எந்தன்
சிந்தனைப் பத்திரமோ—அழகுக்
கலையோ கற்பனையோ நீ எந்தன்
கண்களில் நிரந்தரமோ!

என்னைக் கலைத்துவிட்டேன் உனக்குள்
பெண்ணைக் கண்டுவிட்டேன்—உன்னில்
கண்ணைத் தொலைத்துவிட்டேன் உலகில்
என்ன இனி இரசிப்பேன்.!

பெற்றவர் எவரடியோ பிரம்மன்
உற்றவர் செய்தனரோ---பிறவியில்
கண்டு தொழுதிடணும் அவர்
காலடி விழுந்திடணும்.

விந்தையும் நிகழ்ந்திடுமா மண்ணில்
வேறென்ன அதிசயமோ!----பாவி
வஞ்சகன் இறைவனடி அழகை
மிச்சமும் வைக்கலையே!

பிறவியும் இனி வேண்டாம் வேறு
பெருமையும் பேறுண்டோ!—பயனே
உனக்குள் அடங்கிவிட்டேன் போதும்
எனக்குள் விளங்கிவிட்டேன்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (30-Nov-14, 9:09 am)
Tanglish : piravi ini ventaam
பார்வை : 138

மேலே