குற்றவாளி, நான் மட்டுமே

உதட்டில் புன்னகை
பூசி இருப்பதால்,
எண்ணி விடாதே,
காயங்களை என்னிதயம்
கண்டதேயில்லை என்றே..

கடிவாளம் ஏதுமின்றி -நான்
உன் மீது கொண்ட காதல்
தந்துவிட்டுப் போனதடா,
கோடான கோடி காயங்கள்..

உன் மீதானா காதலை
திரை இட்டு மறைத்ததை
போன்றே - மறைத்துவிட்டேன்,
நீ பரிசளித்து சென்ற
காயத்தின் வடுக்களையும்...

உ(ன்)னை தெரிந்தவரெல்லாம்
இன்றும் உன்னை போற்றிட,
ஊராரின் கண்களிளெல்லாம்,
நான் மட்டுமே - என்றும்
குற்றவாளிக் கூண்டில்!..

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (30-Nov-14, 9:40 am)
பார்வை : 114

மேலே