காதலாகி

ஆணழகே
பெண் அழகை மயக்க வந்த
கதிர் சுடரே
அகராதியை புரட்டிப் போடு
உன் பெயருக்கு நிகராக
ஒரு பெயர் தேட
மதி மயங்கும் நேரத்தில்
மழலை மனதில்
சிம்மாசனமாய் அமர்ந்தவனே
உன் வீர நடையோ -என்
புத்தியை பேதலிக்க செய்கிறது
இதழ் ஓரம் விரியும் உன் புன்சிரிப்பில்
புண்ணாகிப் போனேன்
மழைத்துளியின் சிறு பனித் துளியில்
கரைகின்றதைப் போல
உன் ஒவ்வொரு பேச்சிலும்
கரைகிறேன்
தங்கத்தாமரை நடுவில்
தவழுகிறது என் மனம் -உனக்காக
அடிமையாகி -உன்
மடி தேடி நிற்கிறேன்
விரிசல்கள் இல்லா -உன்
விரல் இடையில் ஆறா விரலாக -என்
விரல் கோர்த்து பயணிக்க வேண்டும்
என் பாதச் சுவடுகள் எல்லாம் -உன்
காலடித் தடமாக மாற வேண்டும்
பொற்கொடி பூ இதழ் மேனியில்
தேனினும் இனிய உன் பார்வையை ஊற்றாதே
செவ்விதழ் சோலைக்குள் ஒளிகிறாய்
செந்தூரம் வர்ணமதில் என் உதடுகள் மேலே
பொக்கிஷ பொதிகள் போல -உன்
நினைவொன்று போதும்
நனவான என் கனவுகளும் நிறைவேற
இமை அசைத்து எனை பார்க்கும் போதே -உன்
இதயத்திலே மாட்டிவிட்ட சூனிய பொம்மை நான்
உன் விழிகளின் அசைவிற்கேற்ப அசைகிறேன்
தந்தி அடிப்பது போல -என்
மனதில் முந்தி செல்கிறாய்
தோற்றுப் போகவேண்டும்
உன்னிடம் அல்ல உன் விழிகளிடம்