ஊடல் தந்த வெறுமை

வீட்டில் இருந்தும் விலகி நிற்கிறாய்
விரல் பட்டால் கூட விரட்டி அடிக்கிறாய்!

வியந்து வினவினாய்
என்ன யோசிக்கிறேன் என்று... கூறவா?

ஏதோ ஒன்று குறையுதென்று
மனம் கோடி துன்பம் அடையுதடி!

நீ அருகில் இருந்தும் உன் மனதில் நானில்லை என்று நினைக்கையில்
என் மனம் பாடுபடுகுதடி!

என்ன செய்ய
என்ன செய்ய...
நான் அளித்த பரிசை
வட்டியுடன் திருப்பித் தரும்
உன்மேல் எனக்கு ஊடலில்லை...
காதல்தான் !

எழுதியவர் : ரமேஷ் somasundaram (2-Dec-14, 4:05 am)
பார்வை : 1099

மேலே