அவன் மறந்தான்
எங்கோ செல்லும் பயணத்திலே-என்
உள்மனதில் அவனின் ஞாபகம்,
பறந்த போன சிறகை பிடிக்க
என் நெஞ்சுக்குள்ளே ஒரு தாகம்.
என் நிழலுக்குள்ளே நிழலாய் இருந்தான்-இன்றேனோ
போகும் வழியில் என்னை மறந்தான்.
எவளோ ஒருவள் கை பிடித்து
அவன் போகையிலே,
என் கண்ணுக்குள் கனலுமடா
நம் ஞாபகம்-என்
நெஞ்சுக்குள் சுழலுமடா
நம் காதலும்.
சேமித்த ஆசையெல்லாம்
மனதின் ஓரம் கிடக்க-இனி
அதை நிறைவேற்ற நான்
எங்க ஆள் பார்க்க.
இறந்துபோன முகவரிக்கு காதல்
கடிதம் எழுதினேன்,
மறந்த போன முகத்துக்கு
என் ஞாபககவி எழுதினேன்.
ஓரமாய் நீ பார்த்த பார்வை ,என்
கண்ணின் ஓரமாய் வடியுதடா!
இன்று,என்னை விட்டு நீ
ஓரமாய் போகும்பொழுது என்
நெஞ்சுக்குள்ளே காதல் தீ எரியுதடா!
புது மணமகனாய் நீ போகும்
போது சின்ன வேண்டுகோள்,
நீ போகும் வழியில் என்
கல்லறைக்கு பூக்கள் இட்டு போ!!