பழத் தோட்ட அருவி - பார்த்தால் - பாய்ந்து வரும் கவி

குற்றால சீசனடி - பெண்ணே
கொஞ்சும் உன் அழகு முகம்.....!!

இமை திறந்த இரு விழியால் - என்
இதயத்திலே எழில் சாரலடி ....!!

பழத்தோட்ட அருவியென பாவையே - நின் பல்வரிசை
பாய்ந்திடக் கண்டேனடி - இரு கன்னங்கள் நடுவினிலே ..!!

அருவிக்கும் ரோஜாப் பூமாலையோ ? என
அன்பே ரசிக்கின்றேன் - அழகே - அந்த இதழ்களின் விளிம்பினிலே ...!!

மெல்லவே ரசிக்கையில் - மென்மையாய் கவிஞனாக்குகிறாய்
மேலும் மேலும் ரசிக்கையில் - உண்மையாய் கிறங்கடிக்கிறாய் ....

பேதையே பழகினேன் காதல போதையும் அழகடி - கவிப்
பாதையை பழக்கினாய் ! பூவையே வாழ்க நீ....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (2-Dec-14, 9:13 am)
பார்வை : 85

மேலே