நீலக்குயில் தேசம்7---ப்ரியா

(முன்பகுதி சுருக்கம்:தன் தாத்தாவின் மனநிலையையும் அறிந்து கொண்டாள் கயல் அதன்பிறகு தன் தோழிகளுடன் கலந்தாலோசிக்க நினைத்து கிளம்பும் வழியில் யாரோ அழைக்க திரும்பினாள்.)

கயல் ஒரு நிமிடம் என அழைப்பை கேட்டு திரும்பியவள்........அப்படியே திடுக்கிட்டாள் அவர்கள் வீட்டுப்பக்கத்திலுள்ள தூரத்து சொந்தமான மல்லிகா அத்தையின் மகன் அரவிந்த்.....அவன் பக்கத்தில் அந்த ராகேஷ் இவன் எப்படி இங்க...? என்று மறுபடியும் மனதில் நினைத்தவள்.....அதைக்கண்டுக்காமல் என்ன அரவிந்த் என்ன விஷயம் என்று கேட்டாள். நீ உன் தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்ததை நானும் கேட்டேன் அதைப்பற்றி எனக்கு நிறைய விஷயங்கள் தெரியும் நான் அப்புறம் சொல்றேன் இப்போ கொஞ்சம் அவசரமா வெளில போகணும் ஒரு வாரம் கழித்துதான் வருவேன் அப்போ வந்து தெளிவா பேசுறேன் என்று சொன்னவன் தள்ளி நின்ற ராகேஷை அழைத்து இது என் நண்பனின் தம்பி ராகேஷ் என்று அறிமுகப்படுத்தினான்.......உன்கூட படிக்கிறதா இப்போதான் சொன்னான் இப்போ டைம் ஆச்சி அப்புறம் பேசலாம் வரேன் என்று சொல்லி நகர்ந்தான்.

அவன் அவளை கடந்து செல்லும் போது மறுபடியம் அவன் கண்களை காண நேர்ந்தது. ஐயோ என்ன கண்ணுப்பா இது அப்டீன்னு பசங்க சொல்லுவாங்க ஆனா இங்க நேர் மாறல் கயல் அவன்கண்களை பார்த்து பிரமிக்கிறாள் இவ்வொரு தடவையும் ஏதோ தடுமாற்றம் அவளுக்கு ஆனால் அவனுக்கு அப்டி இருக்குமான்னு இவளால் யூகிக்க முடில.
ஆனால் அவன் பார்வை ஏதோ உணர்த்துகிறது என்று கயல் நன்கு புரிவாள் ஆனால் அந்த அர்த்தம் தான் இன்னும் சரியாக விளங்கவில்லை கூடிய சீக்கிரம் தெரிந்து கொள்ளலாம் என்ற மன நிறைவுடன் கயல் தன் தோழிகளை பார்க்க சென்றாள்.

அங்கு தன் தோழிகளிடம் நடந்த கதைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள் முக்கியமாக தனது கனவைப்பற்றியும் தன் தாயிடம் அதை சொன்னதைப்பற்றியும் சொன்னாள்.

தோளிகளுக்குள் இந்த புது மற்றும் பளையக்கதைகள் கொஞ்சம் தடுமாற்றத்தை ஏற்படுத்தினாலும் அதை பெரிது படுத்தாமல் எளிதாய் முடிக்க நினைத்தார்கள்......கயலை ஆசுவாசப்படுத்தி தங்களுக்கான அறிவுரைகளை சொன்னார்கள்.

அவர்கள் திட்டப்படி அவர்களின் முதல் விசாரணனை மல்லிகா அத்தையின் மகன் அரவிந்த்.....இரண்டாவது அந்த ராகேஷ்.....ராகேஷ் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் என்பதே இவர்களின் உறுதியான முடிவாக இருந்தது அதற்காக புது திட்டம் ஒன்றை வகுத்தார்கள் அதை அடுத்தநாள் கல்லூரியில் செயல்படுத்தவும் முடிவு எடுத்தார்கள்.

வீட்டிற்கு சென்ற கயலால் நிம்மதியாக தூங்கமுடியவில்லை அவள் கண்கள் முழுவதும் அந்த முகம் தெரியாத அத்தையின் முகமும் ராகேஷ் முகமும் தான் வந்து போனது.......முடிவில் தூங்கியும் போனாள்.

மறுபடியும் அவளது கனவில் அதே அந்த காட்டுப்பகுதி அதே சூழல் அதே பறவைகள்.....அந்த தேசத்திற்கு சென்றவள் இன்று எப்படியாவது நம் மணாளனைக்காண வேண்டும் என்ற முடிவில் நடந்து கொண்டிருந்தாள் ஒவ்வோர் எல்கைகளையும் தாண்டி சென்று கொண்டிருந்தாள் இடம் நீண்டு கொண்டு போகிறதே தவிர மனிதர்கள் யாரையும் காணவில்லை......சென்றுகொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் ஒரு மரத்தில் "நீலக்குயில் தேசம் அன்புடன் வரவேற்கிறது" என்று எழுதப்பட்டிருந்ததைக்கண்டாள் ஆக இந்த இடத்தின் பெயர் நீலக்குயில்தேசம் என் நம்பினாள் கயல். இன்னும் வேகமாக நடந்தாள் ஓடினாள் சுற்றும் பார்த்தாள் இப்போது அவளுக்கு அழகிய சந்தன வாசம் பரவியது இன்னும் போகப்போக சாமந்திப்பூவின் வாசமும் சந்தன வாசமும் கலந்து மணம் பரப்பியது இதை நுகர்ந்த அவளுக்குள் ஏதோ மாற்றம் என்னவோ ஒருதடுமாற்றம்.....சுற்றிப்பார்க்கும் போது அவன் அங்கு நின்றிருந்தான்.

ஓடிபோய் அவனை பின்புறம்கட்டிக்கொண்டாள்...அல்லிராணி வருக இவ்ளோ நாள் எங்கே போனீங்க என்ன பார்க்கணும்னு தோணல இல்ல இந்த சாமந்தியும் சந்தன வாசமும் சேர்ந்தாலே நாமிருவரும் சேர்ந்துவிட்டோம் என்றுதான் அர்த்தம் மறந்துட்டியா என்றுக்கேட்டான்.

அவள் நீங்க ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று கோவமாய் கேட்க நம்ம பேச்சுப்படி நீதானே என்னைப்பார்க்க
வரவேண்டும் நான் உன்னை சந்திக்க வந்தால் அன்றே என் உயிர் போய்விடுமே என்று பழைய வசனத்தை பேசினான்.

சரி இப்போ வந்துட்டேன் இல்ல உங்களுக்கு என்ன கொண்டு வந்திருக்கேன் பாருங்க என்று அவள் அவனை முன்னிழுக்கும் சமயம்தான் அவனது மார்பில் "கயல்விழியாள்" என எழுதப்பட்டிருப்பதை பார்த்தாள் அதைப்பார்த்தவள் அவன் மார்போடு அந்த பச்சைக்குத்திய எழுத்துக்களை தடவி பார்க்கும் சமயம் குயில்களும் காக்கைகளும் இரைந்து கொண்டே ஓடின.........அவ்வளவுதான் இன்றும் நம்ம கயல் அவள் காதலனின் முகம் பார்க்காது கனவிலிருந்து மீண்டாள்.........!

கவலையுடன் துயில் எளும்பியவள் தன் தாயிடம் பேசிவிட்டு ரெடி ஆகி கல்லூரிக்கு சென்றாள்
தன் தோழிகளிடம் முதல் கேள்வியாய் ஒன்றைக்கேட்டாள் கயல்......
என் மீது என்ன வாசம் வருகிறது என்று? சாமந்தி ஸ்பிரே போட்டிருக்கா அந்த வாசம்தான் ஏண்டி இந்த திடீர் கேள்வி தினமும் நீ போடுறதுதானே என்றார்கள்.இல்லடி நான் ஸ்பிரே பயன்படுத்துறதே இல்லை என்று சொல்லும் போதே துள்ளிக்குதித்தாள் கயல்.............!

தோழிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.என்னடி நீபாட்டுக்கு சிரிக்கிற என்னன்னு சொல்லு என்றார்கள் தன் உடம்பில் இயற்கையிலே இந்த வாசம் இருப்பதாகவும் இன்றையக்கனவையும் தோழிகளிடம் சொல்ல...........?

தெரியும்டி நீ உன் ஆள பார்த்திருக்கமாட்டான்னு ஆமா உண்மையிலேயே நீ உண்மைதான் சொல்றியா ஸ்பிரே அடிக்கமாட்டியா இரு உங்க அம்மாக்கிட்ட கேட்கிறோம் என்று கலாய்த்தார்கள் ..........கயலும் தோழிகளின் கலாய்ப்பை ஏற்றுக்கொண்டவளாய் பதில் பேசாது நடந்தாள்......போதுமடி நம்ம கயல் பாவம் அவளுக்கு ஏதாவது உதவி பண்ணுவோம் என்று மறுபடியும் தோழிகள் பேசிக்கொள்ள ராகேஷ் பற்றி பேச்சு நடந்தது.

இவர்கள் ராகேஷ் பற்றி பேசும் சமயம் அரவிந்த்,ராகேஷ், மற்றும் இன்னொரு பெண் மூன்றுபேரும் கல்லூரியின் பக்கத்தில் இருந்த அந்த காபி ஷாப்பில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க தன் தோழிகளையும் கவனியாது வேகமாய் அரவிந்திடம் சென்றாள் கயல்........!




தொடரும்........!

எழுதியவர் : ப்ரியா (2-Dec-14, 4:06 pm)
பார்வை : 375

மேலே