நீலக்குயில் தேசம்8---ப்ரியா

(முன் பகுதி சுருக்கம்:கயலின் தூரத்து உறவு அத்தை மகன் அவளிடம் அவளது சொந்த அத்தைப்பற்றி சொல்ல வந்தவன் நேரமில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான் சென்றவனை மறுபடியும் கல்லூரியில் பார்க்கிறாள் கயல்.....)
கல்லூரிக்கு போகும் போது தோழிகள் கலாய்க்க அவளும் அதை ஏற்றுக்கொண்டவளாய் நடந்து கொண்டிருந்தாள்.
தோழிகள் சீரியஸாக..... பாவம்டி நம்ம கயல் அவளுக்கு எவ்வளவு பிரச்சனைகள் ஏதாவது உதவிப்பண்ணுவோம் என்று அவளைப்பார்க்க அதற்குள் கல்லூரியின் அருகில் இருந்த அந்த காபி ஷாப்பில் அரவிந்த் ராகேஷ் மற்றும் ஒரு பெண் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் தோழிகளையும் கவனியாமல் அரவிந்த் பக்கம் சென்றாள் கயல்.....!
ஆனால் அரவிந்தோ இவள் வருகையை பார்த்ததும் அவளைக்காணாது அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விட்டான் கயல் அவனைப்பார்த்ததை அவன் கவனிக்கவில்லை......பக்கத்தில் சென்ற கயலுக்கு ஏமாற்றம்..........அரவிந்த் எங்க போறான் என்று ராகேஷின் அருகில் அமர்ந்திருந்த பெண்ணிடம் கேட்டாள் கயல்.
அரவிந்தா?யாரு?என்று புரியாததுபோல் கேட்டாள் அந்தப்பெண்........உடனே ராகேஷைப்பார்த்தாள் பார்த்த கயல் அது அரவிந்த் தானே என்று அமைதியாய் கேட்டாள்?அவள் பார்வைக்கு பொய்யாய் இருக்க விரும்பாதவன் ஆமா அரவிந்த் தான் வெளியூருக்கு போறான் இது அவனோட............தோழி இவக்கிட்ட சொல்லிட்டு போகத்தான் வந்தான் நேரம் ஆச்சின்னு உடனே கிளம்பிட்டான் என்று பதிலளித்தான்.
தோழியா?தோழின்னா எதுக்கு பொய் சொல்லணும் என்று கயல் கேட்க?
அது வந்து......என்று அவள் சொல்ல யோசிக்க??????
ரெண்டு பேருக்கும் சண்டை அதான் அவள் அப்படி சொன்னாள் என்று சமாளித்தான் ராகேஷ்.
அதற்குள் தோழிகள் இருவரும் அங்கே வர........... சரி அப்போ நான் கிளம்புறேன் ராகேஷ் என்றவள் அந்த பெண்ணை ஒரு முறைப்பார்த்தாள் உங்கள் பெயர் என்ன அப்டீன்னு அவளிடம் கேட்க அவள் சொல்லத்தயங்கினாள்.......ராகேஷ் சொல் என்பதுபோல் கண்காட்ட அவள் பெயரை சொன்னாள் திவ்யா....!
அந்த இடத்தைவிட்டு அனைவரும் கலைந்து வகுப்பிற்குள் சென்றனர்.
திவ்யாவிற்கும் அரவிந்த்க்கும் ஏதோ இருக்குதுடி என்று கயல் சொல்ல.....அது இருக்கட்டுமடி நம்ம ராகேஷ் பத்தி தான் முதலில் தெரிஞ்சிக்கணும் என்று தோழிகள் சொல்ல அந்த நேரம் அதுவே சரி எனப்பட என்ன பண்ணலாம் என்று யோசனையில் மூழ்கினர்.....!
அதற்குள் வகுப்பிற்கு வந்த அந்த பேராசியரைப்பார்த்த கயலுக்கு சுட வைத்த அமிலத்தை அப்படியே விழுங்கியது போல வயிறு பற்றியது.
ஐயோ எனக்கு பார்த்து இப்டி எல்லாம் அமையுதே என்று தலையில் அடித்துக்கொண்டாள் என்னடி என் என்ற தோழிகளும் அவனைப்பார்த்து திரு திருன்னு விளித்துக்கொண்டிருந்தன...........!
காரணம் அதே பழைய கதைதான்........2 மாதங்களுக்கு முன் ஒருநாள் தோழிகள் மூன்றுபேரும் சேர்ந்து படம் பார்க்க செல்லும் சமயம் வழியில் ஒருவன் இவர்களிடம் வம்பு பண்ணிருக்கான் மூதேவிகளும் சேர்ந்து வெளுத்துக்கட்டிட்டாங்க கேவலமும் அடியும் தாங்க முடியாதவன் தூரத்தில் அமைதியாய் எங்கோ பார்த்து நின்ற ஒருவனை கைக்காட்டி அதோ நிக்குறானே அவன் தான் இந்த பிங்கலர் சுடிதாரில் நிற்கும் பெண்ணை தொட்டுவிட்டு ஐ லவ் யூ சொல்லுன்னு பெட் கட்டினான் அதற்காகதான் இப்டி பண்ணினேன் என்றவன் கண்ணிமைக்கும் நேரத்தில் சிட்டாய்ப்பறந்தும் போனான்...........
கோவம் தலைக்கேறிய கயலை தோழிகள் இன்னும் ஊக்குவித்து அந்த தூரமாய் நின்னவனை துவைக்க சொல்லி அனுப்பினர் தோழிகளுடன் துணையுடன் அவன் சட்டையைப்பிடித்து செருப்பால அவன் கன்னத்தில் ஒரு அடி கொடுத்தாள் கயல்..........இதை சற்றும் எதிர்பார்க்காதவன் எதுவும் புரியாமல் கோவத்தில் அவளை முறைக்க அதற்குள் அங்கு வந்தவர்கள் விசாரிக்க நடந்ததை ஒன்று விடாமல் அழுதுகொண்டே சொல்லிய கயல் அவனை மறுபடியும் அடிக்க சென்றாள்..........
ஏய் நில்லுடி நீ யாருன்னே எனக்குத்தெரியாது உன் பாட்டுக்கு இப்டி பண்றா நீ சொல்ற கதைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமே இல்லை அவன் யாருன்னே எனக்கு தெரியாது நான் நீங்க நினைக்கிற மாதிரிபட்ட தப்பான ஆளு இல்ல என்று கூட்டத்தின் நடுவே பணிவாய்ப்பேசினான் ஆனால் அவன் பேச்சை இவள் ஏற்காமல் கோவமாகவே நின்றாள்.......சரிடி அவன கூப்பிட்டு கேப்போம் என்று தோழி சொல்ல திரும்பியவள்.........அவன் கைகாண்பித்து ஏளனமாய் சிரித்துக்கொண்டு போவதைப்பார்த்து கூனிக்குறுகிப்போனாள்.......!
எப்படி சமாளிப்பது தேவையில்லாமல் இவனை இப்படி வம்புக்கு இழுத்துட்டேமே அவன் பேச்சைக்கேட்டு என்று அப்படியே மன்னிப்பு கேட்கும் நோக்கில் நின்றாள் அதற்குள் அங்கு வந்த கூட்டம் கலைய............அவனிடம் மன்னிப்பு கேட்டாள் ஆனால் அவன் பதில் பேசாமல் நகர்ந்துவிட்டான்............
அன்னிக்கு கயலும் அவள் தோழிகளும் வம்புப்பண்ணி கேவலப்படுத்திய அவனே தான் இவன்....
அவன் இங்கு இன்று இவர்களுக்கு பாடம் நடத்தும் பேராசியராக இவர்கள் முன் நிற்பதை பார்த்ததும் பயத்திலேயே இவர்கள் நடுங்கிவிட்டனர் அந்த குளிரிலும் இவர்கள் முகம் மட்டும் வியர்த்திருந்தனர்.......பக்கத்தில் இருக்கும் மாணவிகள் ஒருவருக்கொருவர்......... என்னடி இவரா நமக்கு NON -MAJOR பாடம் எடுக்க போறாரு ஆளு செமையா இருக்காரு ஸ்டூடன்ட் மாதிரி இல்ல இருக்குது என்று ஒருத்தி பேச....?
அடுத்தவள் இல்லடி இவரு இங்கதான் எம்.பில் படிக்கிறாரு கிளாஸ் எடுக்க இவங்க இல்ல வேற ஒரு மேடம் வருவாங்க அவங்க மெடிக்கல் லீவ் அதுவரைக்கும் இவங்கதான் எடுப்பாங்களாம் என் அக்கா சொன்னா என்று சொல்ல...?
அப்பாடா இவன் பெர்மனென்ட் கிடையாதாம்டி கவலைப்படாதீங்க ஒரு 15 நாட்கள் இருப்பான் அப்புறம் போயிடப்போறான் என்று ஷீபா சொல்ல கயலும் அஜியும் கொஞ்சம் நிம்மதியானார்கள்.
ஹேய் அவன் கண்டுபுடிச்சிடுவானோ நம்மள நினைவிருக்குமாடி என்று ஒருத்தி கேட்க பயப்படாதீங்கடி அவனுக்கு மறந்திருக்கும் நம் முகமெல்லாம் நினைவு வச்சிருப்பானா?அந்த இன்சிடன்ட் அப்பவே மறந்திருக்கும் என்றாள் கயல்............சரிடி நமக்கு அவர பார்த்ததும் நினைவிருக்கும் போது அவருக்கு ஏன் நினைவிருக்காது என்றாள் அஜி.......இவர்கள் இப்படி சலசலத்துக்கொள்ள திடீரென இவர்கள் பக்கம் திரும்பினார் அவர்........ஐயோ போச்சுடி பார்த்துட்டாரு என்று கயல் சொன்னாள்.
அவர் இவர்களைப்பார்த்து பேசாமல் அமைதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு பாடத்திலுள்ள ஒரு சிறு குறிப்பை அனைவருக்கும் கொடுத்து நாளைக்கு உங்கள்ல ஒருத்தங்க இதவச்சி விரிவா வகுப்பு நடத்தணும் நல்லா ப்ரிப்பேர் பண்ணிட்டுட்டு வாங்க யாரு வகுப்பு நடத்தணும்னு நான் வந்து சொல்றேன் என்று அவர் சொன்னார்..........ஆனால் நம்ம கயல் கூட்டத்தை அவர் நினைவு வைத்திருந்ததாகவே தெரியவில்லை.
அந்த சந்தோஷத்தில் இவர்கள் மூவரும் அமைதி நிலைக்கு வந்தார்கள் இப்பொழுதான் கயல் ஒரு பெருமூச்சு விட்டாள்....!
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ராகேஷ் நொடிக்கொருமுறை கயலை தன் கணங்களால் கைது செய்து கொண்டிருந்தான் இதை இன்று அவள்
கவனிக்க தவறிவிட்டாள்.
இடைவேளையின் போது அந்த பொண்ணு திவ்யாவைப்பார்க்க கயல் மற்றும் தோழிகள் அவள் வகுப்பிற்கு சென்றனர்.......ராகேஷ் திவ்யா அரவிந்த் மூன்றுபேரும் பிரண்ட்ஸ் என்று அவளிடம் முதலில் ராகேஷ் சொல்லியிருந்ததால் அவன் பெயரை வைத்து அவளை சந்திக்க சென்றனர்.சிறிது நேரம் பேசிவிட்டு நேரமில்லாமல் போக மாலை 4மணிக்கு இந்த இடத்தில் வெயிட் பண்ணு திவ்யா நாங்க வந்திடுறோம் கொஞ்சம் பேசணும் மறந்திராத என்று சொல்லிவிட்டு சென்றனர்.....!
மறுபடியும் மாலைவேளையில் ஒருமரத்தில் நிழலில் அமர்ந்து நான்கு பேரும் பேச ஆரம்பித்தனர்............திவ்யாவிடம் முதலில் சகஜமாய் பேசினர் அதன் பிறகு அரவிந்த் ராகேஷ் பற்றி மெதுவாய் விசாரிக்க..........அவள் சொன்ன பதிலைக்கேட்டு அப்படியே ஆடிப்போய்விட்டாள் கயல்........கயல் மட்டுமல்ல அவள் தோழிகளும்தான்............!
அப்படி அவ என்ன சொன்னா???????
இன்னொருபுறம் கயலின் தாய் சுசீலாவும் சந்தோஷமும் பரபரப்பும் நிறைந்துகாணப்பட்டாள்...........காரணம் இதுவரைக்கும் பேசாதா மாமா அதாவது கயலின் அப்பாவின் அப்பா(தாத்தா) இன்று பேச அழைத்திருக்கிறார் என்ன விஷயம் என்ற கேள்விகளுடன் அங்கு செல்லத்தயாரானாள்......??????????
தொடரும்...........!