குறிகள் உணர்த்தும் குறிப்புகள்
அம்மா..
என் வாழ்க்கையின்
ஆச்சரியக்குறி !
அப்பா..
என் பாதைகள் காட்டிய
அம்புக்குறி !
இள வயது காதலி
இன்னும் புரியாத ஒரு
கேள்விக்குறி!
மனைவி ..
வாழ்க்கையில் எனக்கு வாய்த்த
நட்சத்திரக்குறி!
உலகம்..
அனுபவங்களைக் கூட்டும்
கூட்டல் குறி!
தோல்விகள்..
மறக்கப் பட சொல்லும்
கழித்தல் குறி!
சக மனிதர்கள்
எல்லோரும் சமமென சொல்லும்
சமன் குறி!
கடவுள்..
இல்லாமல் இருக்கின்ற
பூஜ்ஜியக் குறி!