தேவைதையின் மறுபக்கம் - 2 - யாழ்மொழி

ஒருவழியாய் படிப்பதுவும்
முடிந்திடவே - இருவரும்
ஒரே நிறுமத்தில் விண்ணப்பித்தோம்
நினைத்தபடி வேலை யங்கு கிடைத்துவிட
நித்தம் ஒன்றாகவே பயணித்தோம்

அழகாக நாட்களும் நகர்ந்திருக்க
அலுவலகத்தில் எங்கள் திறன் வளர்ந்திருக்க
கிளை நிறுமத்தின் உத்தரவில் அன்றொருநாள்
உயரதிகாரியாக ஓர் அழகன் வந்தான்

அதிரடியாய் நுழைந்த ஆணழகனை
அறவே வெறுத்தாள் அன்பானவள்
அலுவலகம் முழுவதும் அவன் புகழ்தான் - ஏனோ
அவ்வளவு ஈர்ப்பில்லை அவளுக்குமட்டும்

இருவருக்கும் எப்போதும் மோதல்தான்
இடையினில் என்பாடு ஆடல்தான்
இப்படியே நாட்களும் ஓடியது - அன்று
தேவதையின் வதனயெழில் கூடியது

என்னிடத்தில் இடைவெளி ஏற்பட்டது
காரணமறிய என்மனம் முற்பட்டது
தேவதையின் தரிசனங்கள் குறைந்தது
விடுப்புகளும் தாமதமும் - அவள்
விருப்பமென்றானது

கயல்விழியாள் கள்ளத்தனம் தெரிந்துகொள்ள - நான்
கண்டுகொண்ட சம்பவங்கள் எடுத்துசொன்னேன்
தோழியிடம் உண்மையினை உரைத்துவிட்டாள்
தேவதையின் காதல றிந்தவள் திகைத்துவிட்டாள்....


(தொடரும்)

எழுதியவர் : யாழ்மொழி (3-Dec-14, 11:23 am)
பார்வை : 111

மேலே