பூக்களின் அரசி

அவள் பூக்களின் அரசி
அவள் வெள்ளைப் பூக்களின் அரசி
அவள் கூந்தல் மணம்
பூவெங்கும் பரவ
மாலையில் பூக்களும் கொண்டது
மயக்கம்

காலையில் அவள் கைபட
மொட்டுக்கள் பூக்கத் தொடங்கும்
அவள் இடுப்பசைத்து நடக்க
பூக்கள் தலையசைத்து ரசிக்கும்
அவள் மூச்சுக் காற்று
பூக்கள் மேல் பரவ
பூ இதழ்கள் சிறகடித்துப் பறக்கும்

தேனிக்களுக்கு அவளை
நெருங்க கொள்ளைப் பிரியம்
அவள் உதட்டுத் தேனை ருசிக்க
இரவு பகல் தவம் புரியும்

அவள் கண்மணியில் கருமை
நிறம் எடுத்து வான் முழுதும்
பரப்ப காற்றுக்கு நீண்ட
நாள் ஆசை

பூக்கள் விடுமா ?! அவள்
மூச்சுக் காற்று இருக்கும் வரை
வான் காற்றுக்கு அவளை
நெருங்க விடாமல் அடித்து
விரட்டும்

இப்படியிருக்க அவள் பூக்களின்
அரசி என சொல்வதில்
தவறில்லையே !
அவள் பூக்களின் அரசி தான்
அவள் வெள்ளை பூக்களின் அரசி தான்

எழுதியவர் : fasrina (4-Dec-14, 10:46 pm)
Tanglish : pookalin arasi
பார்வை : 188

மேலே