என்னை அழைத்து சென்றுவிடு-கயல்விழி

தொலைவானம் தொட
துணிவோடு புறப்பட்டேன்

துணையாக நீ வந்தாய்
துயரென்ன எனக்கு

கரம்பற்றி என்னை இழுத்தாய்
காற்றாகி நான் உயர்ந்தேன்

மேகங்கள் கூட்டி மெத்தை
செய்தாய்
வெண்ணிலவை பிடித்து
வெளிச்சம் தந்தாய்

மெத்தை எதற்கு என்றேன்
என் மஞ்சம் உன் நெஞ்சம் என்றேன்

நிலவொளி வேண்டாம் என்றேன்
உன் விழி ஒளி போதும் என்றேன்

வேடிக்கையாய் என்னை பார்த்து
விளையாட்டு பெண் என்றாய்

மார்போடு என்னை அனைத்து
இதழ் முத்தம் கொடுத்து விட்டு
வேறென்ன வேண்டும் கண்ணே
வெக்கம் விட்டு கேள் என்றாய்

வேறென்ன நான் கேட்பேன்
விடியும் வரை இருப்பது போல்
விடிந்த பின்பும் இரு என்றேன்

வேண்டாம் பெண்ணே வீண் ஆசை மரணித்த நான் மங்கை
உன்னோடு வாழ
வானுலகில் சட்டம் இல்லை

மறுபடியும் நான் பிறந்து
உன்னை மணம் முடிக்க
வாய்ப்பில்லை

மண்ணுலகம் துறந்து
விண்ணுலகம் வந்துவிடு

விடியும் வரை என்ன
வானம் முடியும் வரை
சேர்ந்திருப்போம் என்றாய்

நான் முடிவெடுக்கும் முன்னமே
விடியல் வர மறைந்துவிட்டாய்

மண்ணுலகம் துறக்க
முடிவெடுத்தேன்
மரணத்தை தழுவ துணிந்து விட்டேன்

மன்னவா மீண்டும் வந்துவிடு
என்னை அழைத்து சென்றுவிடு....

எழுதியவர் : கயல்விழி (5-Dec-14, 6:35 pm)
பார்வை : 877

மேலே