தோழனுக்கு பிறந்த நாள்

இனிய நண்பா
உன் பிரியா அன்பால்
படைப்பேன் ஓர் வாழ்த்து வெண்பா !!

நினைப்பென்றும் மழலையாய்
நிற்போமென்றும் பசுமையாய்
பருவத்தில் பாடசாலையில் தொடங்கி
உருவத்தில் மாற்றம் கண்டும்
உள்ளம் மாறது தொடரும் நம் உறவு !

இனிதாய் பிறந்தாய் இன்று
எளிதாய் பழகுவதில் நன்று
என்றும் இன்புற்று இளமையுடன்
வாழ்வாங்கு வாழ்க நீவீர் !!

வெள்ளி நிலவெடுத்து
வாசனை திரவியம் கலந்து
மல்லிகையாய் சரம் தொடுத்து
மாலையாய் சூட்டுவேன் உனக்கு !

இமயத்தை உருட்டி
மின்னலை இணைத்து
இதயத்தை உயிரூட்டி
குளுமை செய்வேன்...!

இல்லற வாழ்வில் நல்லரம்புரிய
இன்பத்தை மட்டும் பரிசளிப்பேன்
உன்னுடன் பழகிய முதல் நாளை
இன்னும் எண்ணியே நான் வாழ்வேன்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்
வாழ்த்துதல் சொல்லி மனம்மகிழ்ந்தேன் !

(குறிப்பு: பள்ளி தோழன் சிவசங்கரின் பிறந்த நாள் இன்று )

எழுதியவர் : கனகரத்தினம் (5-Dec-14, 7:04 pm)
பார்வை : 843

மேலே