மாய உணர்வு - காதல்

கல் தோன்றா மண் தோன்றா
கடல் தோன்றா காலத்தின் முன்பே
புவியில் பிறந்த அழகான
உணர்வு காதல்

சாதி மத வேறூபாடு இன்றி
அனைத்து உயிரினமிடம்
உள்ள ஒரு உன்னதமான
உணர்வு காதால்

மனிதனென்றோ காக்கையென்றோ
குருவியென்றோ குள்ள பூச்சியென்றோ
வாய் பேசும் ஜீவனென்றோ
வாய் பேசா ஊமையென்றோ

யாவறுமே உணர்ந்த உணர்வு
உணரபட்ட உணர்வு
இனி உணர போகும் அமர
உணர்வு காதல்

புவி மாய்ந்து பல
ஜென்மம் எடுப்பினும்
மாய்வின்றி பிறக்கும்
மகத்தான மாய உணர்வு காதல்

எழுதியவர் : udayakumar (5-Dec-14, 7:38 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 148

மேலே