யார் ஞானி -- கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

யார் ஞானி -- கிறிஸ்மஸ் கொண்டாட்டம்
பாலகன் ஏசுவுக்கு,

பொன்னை படைத்து
பொன்னான(செழுமையான)
வாழ்வே பெரியது என்று நினைத்தான்
ஒரு ஞானி


வெள்ளைப்போளம் படைத்து
வெண்மையான (தூய்மையான)
வாழ்வே பெரியது என்று நினைத்தான்
ஒரு ஞானி


தூபவர்க்கத்தை படைத்து
மனம்வீசும் (புகழ்)
வாழ்வே பெரியது என்று நினைத்தான்
ஒரு ஞானி


தம்மையை படைத்து
தன்னை போல் ((தியாகம்)
வாழ்வதே பெரியது என்று புரியவைத்தார் அவரே ஞானி


[ சர்வ வல்லதேவன் மாட்டுதொழுவத்தில் இருந்து கொண்டு ]

"அவரே சர்வஞானி"

எழுதியவர் : PAUL (5-Dec-14, 10:24 pm)
பார்வை : 991

மேலே