சலனம் கொள்ளுதே மனது
மெழுகில் வார்த்தே ,
சிலையாய் வடித்தானோ ..
மின்னும் இவள் ,
தேகம் கண்டே ..
தொட்டுப் பார்க்க ,
சலனம் கொள்ளுதே மனது ..
இழுக்கும் இதழ்களுக்கு ,
இணை ஒன்றும் அறியேன் ..
இழுத்துக் கொடுக்கையில் ,
மங்கிப் போகுமோ கண்கள் ..
முகத்தில் மிதக்கும் ,
ஒற்றை முடியாய் நான் ..
விரும்பி வருடுமோ ,
இவள் விரல்கள் ..
போதை ஏற்றும் ,
பாவை இவள் கண்கள் ..
போதும் போதும் ,
எனும்வரை விட தோணாதோ ..

