விட்டு செல்லும் காதலை தொட்டு பார்த்தாலென்ன

விட்டு செல்லும் காதலை தொட்டு பார்த்தாலென்ன
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கனமான உன் பார்வைதான்
இதமான இதயத்தை
பதம் பார்த்து
காதல் என பேர் வைத்து
புது மலரின் மணத்துடன்

உனை தேடும் தென்றலாய்
நீ இல்லை என்றதும்
தூக்கி வீசும் புயலாய் !!

என்னுடன் மட்டும் வருகிறது
உனக்கு தெரியாமல் !

உன் முகம் கேட்டு
அழும் குழந்தையாய்
கதறுகிறேன்
கண்ணீருடன் !

இமை தேடி
விரல் தொட நினைத்து
இறுதியில்
பாதம் மட்டும் பார்த்த
பாவி ஆனேன்

சிந்தனையை சிதைத்து
விழிதனில் வசிப்பவளே
வாடகை எங்கே ?
உன் கைபட்ட காசு
என் உயிரோடு பேசும் - ஆதலால்
கொடுத்துவிடு கொஞ்சம்

நினைவில் நின்று
நிம்மதி தருபவளே
தரை பார்த்து நடக்காதே
மண் கூட மணம் வீசும்

எல்லை தாண்டி
கொள்ளை கொண்டாய்
மனதை மட்டும் !!

நொடிக்கு நொடி இமைக்கும்
கடிகார காதலாய்

விதியின் பிடியில்
வழி தெரியா காதலாய்

வலியை வரமாய்
நினைவை
சுகமாய் சுமக்கும்
ஒருதலை காதல்

உன் தாவணி கொண்டு தூக்கிலிட்டால்
மரணம் என்பதை மறந்து போவேன்

உயிரையும் உணர்வையும்
உரசி பார்ப்பவளே -நான்
விட்டு செல்லும் காதலை - நீ
தொட்டு பார்த்தாலென்ன ..!

- இராஜ்குமார்

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (6-Dec-14, 10:46 am)
பார்வை : 378

மேலே