தழுவல்

உன்
தழுவல்களில்
பிடிகள்
தளர்ந்திருக்கவில்லை

உன்
தழுவல்களில்
வெம்மை
குறைந்திருக்கவில்லை

உன்
தழுவல்களில்
ஈரம்
மறைந்திருக்கவில்லை

நெருக்கமான நுகர்ச்சிகளில்
தோற்றுப்போன மலர்கள்
ஆயிரம் ......................,


கண்களை கடக்கும்
முன்னே
என்
கண்ணீர்
கண்ட
உன் விரல்களின் ஸ்பரிசம் ..................,

பயமுறுத்தும் இருள்களும்
மடிந்துவிடும்
உன் மடி ............,

கடிகாரத்தில்
கரைந்துவிட்டிருக்கும்
என்
குழந்தைக் கால
பருவம் உன்னோடு ............,

அவைகளை
மீட்டெடுக்கும்
தருணங்களில்
என் உணர்வுகளை
முழுமையாய்
தழுவிக்கொள்ளும்
தழுவல்கள்
உன்னது ......................,

எழுதியவர் : haathim (6-Dec-14, 10:48 am)
Tanglish : thazuval
பார்வை : 217

மேலே