பற்றா நிலவுக்காக,பற்றமுடியா நிலவை பற்றி

நிலவின் மீதான
நின் நிகரில்லா
நிறை காதல்தன்
நிறை நீட்சியினால்தானோ
நிதமான குளிரும்
நிறைவான பெயரும்
நிலவுக்கு .....
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பகற்பொழுதில் உனதழகை
எதிர்கொள்ள போதுமான
திராணியும் துணிவுமற்று
பலமுறை பலவாறு முயன்றும்
பன்பிறைகளை பெற்றும்
உனைவெல்ல முடியா
பெரும் வருத்தத்தில் தான்
பௌர்னமியாய் ஒளிர்ந்தவள்
அமாவாசை இருட்டுக்குள்
ஒளிகின்றாளோ ??
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நிலவிற்கும் உனக்குமான
அழகிபோட்டியில்
நிலவழகி நீ வென்றதனால்
நிர்ணயா நீ நிர்ணயித்த
விளையாட்டு நிபந்தனை தான்
முழு பிறையும் குறை குறையாய்
குறைந்து,குறைந்து கடைசியில்
முழுதாய் மறைந்தே போகும்
அமாவாசையோ ??
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
நிலா மகளின் மீதான
நின் புனிதக்காதலுக்கான
நிதர்சன காணிக்கைதானோ
நிலவின் தற்காலிக மரணமாய்
அமாவாசை ..