என் ஆயுள் வாழும்

எத்தனையோ எண்ணங்களை
ஒன்றாக்கி -உன்னிடம்
ஒருமிக்க என் வண்ணங்களைக் காட்டி நிற்கிறேன்

காற்றால் சிலிர்த்து போய்விடமாட்டேன்
ஆனால் இன்று -உன்
கரம் பற்றி சிலையாய் போய்விட்டேன்

ஒரு புன்னை மட்டும் போதும்
இந்த பூ உலகம் தாங்கும்

கண் மை மட்டும் போதும்
கண்டங்கள் கடல் தாண்டி ஓடும்

ஓரசைவு போதும் -என்
இரு ஜென்மமும் தீரும்

மணல் நனைக்கும் மழைத்துளி போல -என்
மனம் நனைக்கும் -உன்
பார்வை போதும்
என் ஆயுள் வாழும் /....,

எழுதியவர் : keerthana (6-Dec-14, 3:21 pm)
Tanglish : en aayul vaazhum
பார்வை : 164

மேலே