காதல் விதி விரிக்கிற வலை

இதயம் எனும்
இரத்தப் பிரதேசம்
இருக்கிற
அனைத்து உயிர்களுக்கும்
காதல்...
விதி விரிக்கிற வலை.
மீன்களுக்கு விரிக்கப்படும்
மை வலைப் போல...
இது தை வலை.
இதயத்தை
இரண்டாய் கிழித்து
தைப்பவளின் வலை...
ஆம்,
காதல் ...
விதி விரிக்கிற வலை.