சிந்தும் குளிர்ந்து

பாலருவி பொங்கிவிழ பக்கத்தில் பூத்திருக்கும்
கோலமிகு வண்ணமலர்க் கூட்டமிது ! - நீலமலர்
பூச்சொரிய செம்மலர்கள் புன்னகைக்க வெள்ளருவி
கூச்சத்தில் சிந்தும் குளிர்ந்து !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (6-Dec-14, 7:21 pm)
பார்வை : 88

மேலே