தலைப்பில்லா கவிதை

கரமது கடிய
கவிதை தைப்பார் கவிஞர்
கைப்பாவை சரமது வார்த்தை கொண்டு
திறமென எண்ணி மனதில்
திடமுடைப்பார் மனதை தினமும்
பரமெனும் பய்யத்து பயனற்றார் கருத்து.

உரமின்றி உழுதென் பயன்
நஞ்சை நிலமொன்றிருந்தும்
நீரின்றி செழிக்காது பயிர்
தழைமிதித்து சேற்றில் புதைத்தபின்
பூத்துக் குலுங்கும் நெல்மணிகள்
நெஞ்சம் மரத்த கண்மணிகள்

உவ்வாது ஒட்டி ஒழுகும்
ஒழுக்கமொருபோதும்
உள்ளளவில் நிலையாதிருக்கும்
செவ்வாது வாய்க்கால் கரைசெழிக்கும்
சிறு அரும்பும் உவ்வாமை
தவிர்க்கும் அருமருந்தாகும்

(குறிப்பு :கவிதைக்கு பொருந்தும் தலைப்பை பொருத்தும் பொறுப்பு உங்களிடம் )

எழுதியவர் : கனகரத்தினம் (7-Dec-14, 8:44 am)
பார்வை : 141

மேலே