முயற்சி செய்வோம் பெண்களே-சகி

முயற்சி செய்வோம் பெண்களே-சகி

@@@கற்பழிப்பு @@@


பசுந்தோல் போத்திய
புலியாய் நடமாடும் காம
வெறிக்கொண்ட கயவர்களே....

பார்வைகளில் நேர்த்தி இல்லை ...

உன்னை கடந்து செல்லும்
பாவைகள் மேலும் உன் காம
பார்வை தான் ....

மானங்கெட்டவனே ...

மன்னித்துவிடுங்கள் தோழமையே ...

இந்த கேள்வி காமவெறி
கொண்ட சாத்தான்களுக்கு மட்டுமே...

உன் ஆசைக்காக
தாரத்திற்கு பதிலாக
தாயிடம் செல்வாயோ ...

உன் தாரத்தையும்
தாயையும் உன்னைப்போல்
இச்சை ஆசை கொண்ட பலர்
ஆசை பட்டால் விட்டுக்கொடுப்பாயோ ...

உன் ஆசைக்காகவோ அல்லது
உன் நண்பனின் ஆசைக்காகவோ
துணை போகிறாய் எவளோ
ஒருவளின் வாழ்வை சீரழிக்க ...

உன் சகோதரியை
கூட்டிக்கொடு இச்சை ஆசைக்காக ...

மன்னித்து விடுங்கள் தோழமையே ...
வரம்பு மீறிய வார்த்தைகளுக்கு ...

கேவலமான ஆசைக்கு
அடிபணியும் உன் மனதில்
இனி அந்த எண்ணம் வருமோ....

உன் காம ஆசைகளுக்கு
ஏதும் அறியா குழந்தைகளும் ..
பள்ளி செல்லும் சிறுமிகளும் ...

கல்லூரி செல்லும் கன்னியர்களும் ...

தான் குடும்ப சுமைக்குறைக்க
அலுவலகம் செல்லும் குடும்ப
தலைவிகளும் பலியாகிவிடுகிறார்கள் ....

உன் காமப்பார்வை கொண்ட
விழிகளை கூறிய கத்தியால்
கிழித்தெறிய வேண்டும் அந்நிமிடமே....

சதைகளுக்கு ஆசைப்பட்டு
அலைமோதும் உன் கைகளை கோடாரி
கொண்டு வெட்டி வீசவேண்டும் நெருப்பில்....

உன் ஆண்மைதனத்தை
வேரோடு அழிக்கவேண்டும்
அமிலம் கொண்டு...

உன் கால்களை துண்டித்து
சிறு சிறு கூறுகளாக சிதைக்க
வேண்டும் அறுவாளால்....

நீ வாழ வேண்டும் இப்புவியில்....
உயிருள்ள ஒரு பிணமாக ....

பெண்களுக்கு பாதுகாப்பற்ற
சூழ்நிலை தான் இன்று வரை ...

பெண்ணே கற்புக்கு
பலி வந்தால் சிறிதும்
சிந்த்திக்கதே ...

கொடூரமாக அவனை
மண்ணில் வீழ்த்து -நிச்சயம்
முடியும் பெண்ணே....

நம் கோபம் என்னும்
தீ -க்கு அவன் இறையாக வேண்டும்...

போதும் நாம் குலத்திற்கு
இனியும் வேண்டாம் இக்கொடுமை ...

ஒருவனுக்கு கொடுக்கும் தண்டனை
இச்சை ஆசைக்கொண்ட அனைவருக்குமே
பாடமாக அமைய வேண்டும்....

அடிபணிய வேண்டிய சிலவற்றிக்கு
மட்டுமே அடிபணிவோம்...

நம்மால் முடியாது என்பது
எதுவும்மில்லை இவ்வுலகில்....

முயற்சி செய்வோம் பெண்களே...

எழுதியவர் : சகிமுதல்பூ (8-Dec-14, 6:02 pm)
பார்வை : 196

மேலே