மெய்களின் நடுவே
நான் ஆழமாய் நேசிக்கும் ஒரே பெண் !
அவனன்றி ஓர் அணுவும் அசையாது,
அதேபோல் அவளன்றி நான் அசைவதில்லை !
எவ்வளவுபெரிய உண்மை இதுவென்றபோதும்,
அவளுடன் இல்லை இப்பொழுது !
கருத்து வேறுபாடு,
கருணை வேறுபாடு,
காலச்சுலசுழற்சி,
கலைத்துப்போட்டது எங்கள் உறவை !
அடைப்பில்லாத காதல்,
அளவில்லாத கருணைகள்,
மிகையில்லாத அன்பு,
தடையில்லாத உதவிகள்,
எல்லாமே செய்தாள் எனக்கு,
என்றாலும் இவன்,
குரங்கை தோளில் சுமந்த மிருகவகை !
காதல் தெரிந்த அளவுக்கு,
கவனம் தெரியாது !
கத்தியில்லாமல் நித்தமும் குத்தினேன்,
சத்தமில்லாமல் அவள் இதயத்தில் !
எத்தனைநாள் பொறுப்பாள்,
பொறுமையில்லாத மிருகத்தின் காதலை !
கடந்துபோகும் கடற்கரையில்,
அழிந்துதான் போகும் கால்தடங்கள்,
அப்படிபோய்விட்டானோ?
இவன் அவளுக்குள்?
என்றாலும் அவள் குரல்,
எவன் நெஞ்சுக்குள் ஒலிக்கும் வலம்புரிச்சங்கு !
அது தீராது நாளங்கள் நறுங்கும்வரை !
மயானக்கரையில் மடிந்து ஒதுங்கும்வரை !
என்னபேசிஎன்ன?
இல்லையே அவள் நிழல் !
வாழ்ந்துவிடலாம் வருத்தங்களுடன் !
தாழ்ந்துவிடலாம் அழுத்தங்களுடன் !
என்றாலும்,
வீழ்ந்துவிடுவதில்லை காதல் !
தகுதி இல்லாதவனே அவளின் நேர்மைக்கு !
என்கிற உண்மையே இங்கு சமாதானம் !
மிச்ச வாழ்க்கை எவ்வளவோ தெரியாது !
ஆயினும்,
இந்த ஜென்மத்தின் நகர்வு நிச்சயம் !
அவளுடன் வாழ்ந்த மெய்களின் நடுவே !!