விடுதலைக்குள் இரை

மூடுபனிக்குள்
உறங்கிப்போன‌
என் சிறகுகளை
சிலிர்த்து
விடுகிறேன்!!

மரப்பட்டைகளின்
கிழிசல்களுக்குள்
என் நகம்
மாட்டிக்கொண்டது!!

எம்பினேன்!!
வறுகினேன்!!
அடுத்த காலால்
அடிக்கடி
பிறாண்டினேன்!!

விடுதலை
அருகில்
என் சிறகுகள்!!
விடுபடவே
இல்லை என்
கால்கள்!!

தோல்வி
மையமிட்டு
புன்னகைக்க‌!!
இலைகள் எல்லாம்
ஆடி ஆர்ப்பரித்தது!!

ஒரு எம்பல்
சம கணத்தில்
சிறகுகள்
அடித்தேன்!!

விடுபட்ட
கால்களுக்குள்!!
மாட்டியிருந்தது
என் மாலைநேர‌
உணவுக்கான‌
புழு!!

எழுதியவர் : புலவூரான் ரிஷி (7-Dec-14, 8:44 pm)
பார்வை : 119

மேலே