தொடர்பு கொள்வாயா

தொலை பேசியில்.நீ தான்
தொந்தரவு செய்தாய் என்னை.

தொட்டே பேசினேன் உன்னை
தொலை பேசியில் மட்டும்.

தொலைந்தே போனது என் உள்ளம்
தொடர்ந்து பேசியதால். என் இதயம்.

தொல்லையாய் வந்து என்னை
தொலைத்தாய் என் வாழ்கையை..

தொடர்பு எல்லையை கடந்தே என்
தொடர்பு சென்றது உன் மீது காதலாய்.

தொடர் புள்ளியாய் உன் மீது
தொடங்கி கொண்டே போனது.

தொலை தொடர்புக்கு என்னவாகியது
தொடர்பு கொள்ள முடியாது நிலை என்று

தொடர்ந்து அறிவிப்பு வருகிறது.
தொடர்பு எல்லையை மீறி விட்டாயா நீ..

தொடர்பு கொள் மீண்டும் என்னை
தொட்டு கொள்கிறேன் உன் உடலை.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (8-Dec-14, 11:10 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : thodarpu kolvaayaa
பார்வை : 81

மேலே