என் தமிழ் பரதம்
நூலுருப்பு நழுவிய உடலுறுப்பின் காவியம் !!
நிலை கொல்லா சித்திரமாய்
நிலை கொண்ட நித்தியமே!
வரி சொல்லாக் காவியமாய்
நிறை சொன்ன ஓவியமே!
ஆர்மோனியம் ஆர்பரிக்கும்
ஆச்சர்யம் கண் மயங்க
பூச்சொரிய புன்னகைக்கும்
விரல் பூவிதழாய் பூத்திருக்கும்!
அளகு நடனத்திற்கு அவனிகைய!
அடையான் இமைக்கோர் மூடுதிறையா!
அவம் செய்யா அரிவான்மனைப் பார்வையின்
தவம் தாரா வரம் தானே!
அகிற்கூட்டு முகத்தில் அமுதவிழா புன்னகையின்
அக்கினி புராண அத்துவைத்துவமே!
சல்லாபச் சேர்வையின் முகபாவப் போர்வையில்
மரிப்பு முழவு மகுடி முகமே!
பேறுகள் பட்டியலிட்ட பாவனையாம்
பாதம் பேரிகையாகும் யோசனையாம்!
பரிவு கொண்ட பறைதலாய்
பாருடன் பேசுமே பைந்தமிழ் பரதம்!!!!