வாசகியே வாசி - சந்தோஷ்

ஊண் உருகிட
உயிர் கவிதை என்று
எழுதி வைத்தேன் தோழி

கவிதையை எடுத்து -என்
உடலை விட்டுவிட்டாயடி..!

யாக்கைப்பிரிந்த கவிதை
காக்கைப்போல உன்னைத்தானே
கரைக்கிறேன் தோழி...!
வேட்கைக்கொண்ட உன்பின்னாலே
சுற்றுகிறது என் ஆன்மா தானடி...!

”ஆமா டா என் கவிஞனே..!
என் ஆன்மாவில்
குடியேறிய கள்வனே..!
நீயேதான் என் கணவனே..! “

இன்று என்று அல்லாமல்
என்றாவது ஒரு நாளில்
ஒரு முறையாவது சொல்வாயா..?
என் காதல் பைங்கிளியே...!

ஒரு கோடி தமிழ்சொல்லை
தேடித்தேடி புதையலெடுத்தேன்
என் ஆருயிர் தோழியே..!

கோடி சொற்களாலும்
எனக்கு இனித்திடவில்லையே
என் செய்வேன் ?

என் ரசனை எறும்புகள்
இனிப்பென்று உன்பெயரே
கதியென்று அலைகிறதே..!

என் ஆருயிரே......!
எனை ஆளும் உயிரே...!

கவிஞனா.... நான்?
உன் காதல்
கணவன் என்பேனா?

என் பேனா
எப்படி எழுதிட வேண்டும் ?

தீர்ந்துவிடுகிறது நாட்கள்
தீயில் நனைகிறது என் சொற்கள்..!

என் கவிதையின் வாசகியே...!
தீர்ப்பு வாசி..!
தீர்க்காமல் தீர்த்துவிடாதே
என் தீரா காதலை...!


------------------
-இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (8-Dec-14, 3:13 pm)
பார்வை : 124

மேலே