நீ இருந்தால்

கண் கலங்கினால்
துடைக்கலாம் துணியில்கூட!
கவிதை
வடிக்கலாம் கனியில்கூட!
கொஞ்சி கொஞ்சி
பேசலாம் பனியில்கூட!
குறட்டை விட்டு
தூங்கலாம் பணியில்கூட!
வயிறு குலுங்க
சிரிக்கலாம் பிணியில்கூட!
உயிர் பிழைத்து
வாழலாம் சனியில்கூட!
அன்பே !
இதுவெல்லாம் சாத்தியமே
நீ இருந்தால் என்கூட!

எழுதியவர் : க.முருகேசன் (8-Dec-14, 5:52 pm)
Tanglish : nee irundaal
பார்வை : 128

மேலே