விதைகளும் தீப்பொறிகளும்

விதைகள் -
விளைநிலம் நன்றானால்
விண்ணுயர வளரும்
விருட்சங்களாகும் !

தீப்பொறி -
தீக்கொழுந்தாய் மாறி
பெருங்காட்டையும்
துவம்சம் செய்து விடும் !

வீரிய (க)விதைகளை - நல்
விளைநிலம் நோக்கி
விதைத்திடுங்கள் !
விருட்சங்களாய் வளர்ந்து
மின்னல்கள் உமிழும்
கார்மேகங்களை
கருத்தரிக்கட்டும் !

கவி(தீ)பொறிகளை
தீப்பந்தமாக்கி
மானுடர் மனதின்
மாயை இருளை
மாய்த்திடுங்கள் !
தீமைகளை
சாம்பலாய் பொசுக்கி
நல் மரங்களுக்கு
உரமிடட்டும் !

எழுதியவர் : ஜி ராஜன் (9-Dec-14, 4:30 pm)
பார்வை : 87

மேலே