என்னுள்ளே நீயடி

சிற்பிசெதுக்காத
பொற்சிலையே
ஓவியன் கை தீட்டாத
சித்திரமே......

அத்தை மகளே
என்றும் நீ பத்திர
மாத்துப்பத்திரமே....

பட்டத்து ராணியே
என் பஞ்சத்தில் நீ
வாணியே......

நெஞ்சில் ஏற்றியது
உன் நினைவுதானடி
அடிச்சு ஏற்றிய ஆணி
போல் அசையாமலே
உள்ளதடி.....

அந்தப்புரத்தில்
நடனமாடுகிறார்களடி
அது எதற்கு எனக்கு
தேவையடி.....

பனியில் குளித்த
ரோஜா மலராய்
மழையில் நனைந்த
தாமரையாய் வாடைக்
காற்று தடவிய
மல்லிகையாய் தேனோடு
நீ இருக்க நான்
போவேனோ அவள்
வாடாமல்லிகை அதை
நாடுமோ என் மனம்
மங்கையே.......

வந்து அமர்ந்த
நேரம் வரை
மௌனம் காப்பதும்
ஏனோ என் ரதமே....

நோக்கங்கள்
பல உண்டு உன்
நோக்கம் எதை
நோக்கி செல்கின்றதோ
செம்பகமே.....

பால் நிலவும்
பவனி வருகிறதே
பவள மல்லி மணமும்
இதமாக நுழைகின்றதே...

என் கூடவே நீ
இருக்கையில்
மாளிகை விளக்கும்
நீண்ட நேரம் எரிகின்றதே
இது நியாயமா கண்ணே......

அத்தான் எனை
நோக்கடி ஆசை
முத்தம் சிந்தடி
செல்லமாக
கெஞ்சடி தடை
என்னிடம் இல்லையடி
உன் இடை நெருங்க
தயக்கம் ஏனடி.....

விடியா இரவாக
இதை நினைப்போம்
வெளிச்சத்துக்கு விடை
கொடுப்போம்......

என் இதய வீணை
நீயடி உனை மீட்டும்
கரங்கள் எனதடி
அன்பே......

எழுதியவர் : கவிக்குயில் இ.சாந்தகலா (9-Dec-14, 9:06 pm)
பார்வை : 154

மேலே